விஜய் ரசிகர்களை மீண்டும் கொண்டாட வைக்க இதோ ஒரு ஸ்பெஷல்!
விஜய் ரசிகர்களை மீண்டும் கொண்டாட வைக்க இதோ ஒரு
ஸ்பெஷல்!
விஜய் ரசிகர்களை மீண்டும் கொண்டாட வைக்க இதோ ஒரு
ஸ்பெஷல்!திரைப்படம்
விஜய் தற்போது சினிமாவில் மட்டுமல்ல, அரசியல்
வட்டாரத்தாலும் கவனிக்கப்பட்டு வரும் நடிகர். அவரின் படங்களுக்கு சில அரசியல் பிரமுகர்கள்
சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தற்போது அவர் நடித்து வரும் சர்க்கார் படத்திற்கு
போஸ்டர் வெளியான போதே சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி
சுரேஷ் நடிக்க படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
சர்ச்சையான போதெல்லாம் ரசிகர்கள் அவருக்கு மிகவும்
பக்க பலமாக இருக்கிறார்கள். அவரின் ஹிட் படங்கள் பலவும் இன்றும் நம்மை ரசிக்க வைக்கும்.
அப்படியான படங்களில் ஒன்று தான் கில்லி.
திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் நடித்த இப்படம் கடந்த 2004 ல் தரணி இயக்கத்தில் வெளியானது. பாடல்களும், காமெடிகளும் செம ஹிட் தான். விஜய்யின் குறும்பான பேச்சு இப்படத்தில் கூடுதல் சிறப்பு.
இப்படத்தை தற்போது சென்னையில் உள்ள மகாலட்சுமி
திரையரங்கம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளது. ஏற்கனவே சர்கார் கொண்டாட்டத்தில் இருக்கும்
ரசிகர்களுக்கு இதுவும் ஒரு கூடுதலான கொண்டாட்டம்.
Comments
Post a Comment