கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கைத் தொடர்ந்து தற்போது டேராடூனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், விஜய் சேதுபதியும் நடிக்கயிருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் மோதும் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு முன்பே தன்னைத்தேடி இரண்டு ரஜினி பட வாய்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. அதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி நடித்த லிங்கா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் என்னை நடிக்க வைக்க நினைத்த கே.எஸ். ரவிக்குமார் என்னை தேடியிருக்கிறார். ஆனால் அப்போது பார்த்து நான் எனது மொபைல் நம்பரை மாற்றியிருந்ததால் விட்டு விட்டார். அதையடுத்து கபாலியை இயக்கியபோது பா.ரஞ்சித்தும் ஒரு கேரக்டரில் நடிக்க கேட்டார். அப்போது நான் பல படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. அப்படி ரஜினியுடன் நடிக்க வந்த இரண்டு படங்களிலும் நடிக்க முடியாமல் போனதை நினைத்து வருந்தினேன். இப்போது அதற்கும் மேலாக ரஜினியின் 165 வது படத்தில் அந்த இரண்டு படங்களுக்கு...